கிறிஸ்தவ தமிழ் தொண்டர்
₹0.00
இந்த புத்தகத்தின் ஆசிரியர் ரா.பி.சேதுபிள்ளை என்பவராவார்.
இவர் ஒரு தமிழ் அறிஞர்,எழுத்தாளார்,வழக்கறிஞர்,மேடைபேச்சாளர்.இவர் தமிழில் சொற்பொழிவு,உரைநடை எழுதுவதிலும் மிகவும் புகழ் பெற்றவர்.இனிய உரைச்செய்யுள் எனப்படும் புதிய உரைநடையை தனித்தே கொண்டதால் அவரது உரைநடையை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டி உள்ளனர்.
அவரது உரைநடையில் செய்யுள்களுக்கே உரிய எதுகை,மோனை,என்பனவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே முதன்மையானவர்.
Description
ஆசிரியரின் முகவுரை
தமிழ் மொழி தென்னிந்திய நாட்டிலுள்ள எல்லாச் சமயத்தார்க்கும் உரிய செம்மொழியாக இலங்குகின்றது. தமிபுத்திற் பிறந்த மதங்களும், புகுந்த மதங்களும் தமிழ் மொழியைப் பேணி வளர்த்தன. சைவரும், வைணவரும், சமணரும், சாக்கியரும் சிறந்த தமிழ் நூல்கள் இயற்றினர். மகமதியரும். கிருஸ்தவரும் தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்தனர்.
தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த கிருஸ்தவர்களிற் பெரும்பாலோர் மேலை நாட்டு மொழிகளை நன்கு அறிந்த வர்கள். அவர்கள் ஆற்றிய பணி பலவகைப் பட்டதாகும். தமிழ் நாட்டுக் கலைச் செல்வத்தை மேலை நாட்டார்க்குக் காட்டினர் சிலர். தமிழிலக்கியத்தின் பண்புககாப் பாட்டாலும் உரையாலும் விளக்கியருளினர் சிலர், இலக்கண வாயிலாக ஆராய்ந்து தமிழின் தொன்மையையும் செம்மையையும் துலக்கினர் சிலர். மேலை நாட்டு முறையில் தமிழகராதி தொகுத்து உதவினர் சிலர். தெள்ளிய தமிழ் வசன நடையில் அறிவு நூல் இயற்றித் தொண்டாற்றினர் சிலர். இவ்வாறு பல்லோரும் இயற்றிய நற்பணியின் பயனாகத் தமிழ் தலையெடுத்து வருகின்றது.
இத்தகைய தமிழ்த் தொண்டு செய்த பெருமக்களில் ஒரு சிலருடைய வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவது இத் நூல். சென்னை வானொலி நிலையத்தில் யான் நிகழ்த்திய பேச்சு முதல் மூன்று கட்டுரையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அத் நிலையத்தார்க்கும். இந்நூலை வெளியிடுவதற்கு அனுமதி தந்த சென்னைப் பல்கலைக் கழகத்தார்க்கும் என் நன்றி உரிய தாகும்.
Reviews
There are no reviews yet.