Sale!

நாசரேத் மிசன் சரித்திரம்

0.00

நாசரேத் மிஷன் சரித்திரம் புத்தகத்தை எழுதியவர் திருநெல்வேலி திருமண்டல முன்னாள் குருத்துவ செயலர் மற்றும் செராம்பூர் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான அருள்திரு. D.A.கிறிஸ்துதாஸ் அவர்கள். இவர் பல வரலாற்று புத்தகங்களை  எழுதியுள்ளார்.

Description

ஆசிரியரின் முன்னுரை

நாசரேத் சர்க்கிள் கமிற்றியாரின் வேண்டுகோளுக்கிணங்கி, 1949 மே மாதம் முதல் இச் சரித்திரவாராய்ச்சியிலீடுபட்டேன். இவ்வாராய்ச்சியின் தொடக்கமுதலே, திருநெல்வேலி நாட்டில் | S P G ஊழியஸ்தானங்களில் விசேஷித்து விளங்குவதற் கென்.று ஆண்டவர் எவ்வண்ணம் குக்கிராமமான சாண்பத்தைத் தெரிந்துகொண்டார் என்று வியப்புற்றேன். கிறிஸ்தவ மிஷன் கள் இந்தியாவில் ஊழியம் ஆரம்பித்த காலத்தில், அவைகள் தலைமை ஸ்தானமாகத் தெரிந்து கொண்டவிடங்கள் பெரும்பாலும் கல்கத்தா, பம்பாய், சென்னை, தஞ்சாவூர் போன்ற பெரும் பட்டணங்களே . திருநெல்வேலி ஊழியத்திலும் முதலில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி போன்ற நகரங்களே எண்ணப்பட்டன. ஆனாலும் S. P. G யின் முக்கிய ஸ்தானமாக விளங்க எம்பெருமான் தெரிந்து கொண்ட தலம் பாளையங்கோட்டை, தூத்துக்குடி போன்ற பட்டணங்களுமல்ல, ஆழ்வார் திருநகரி, அம்பாசமுத்திரம் போன்ற நகரங்களுமல்ல, தேறித்திட்டுகளின் சரிவில், பனைமரங்களாலும், உடை விருக்ஷங் களாலும் மூடப்பட்டு உறங்கிக்கிடந்த சாண்பத்தாம்! இது தான் விந்தையாய்த் தோன்றிற்று. ஆனால் ஆதிகாலத்தில் சியோன் பர்வதத்தைப் பற்றியும் எம்போன்றே மக்கள் வியப்புற்றனர் போலும். ஆகையால் தான் பக்தன், ” உயர்ந்த சிகரங்களுள்ள பர்வதங்களே, என் துள்ளுகிறீர்கள்? இந்தப் பர்வதத்தில் வாச மா யிருக்க தேவன் விரும்பினார். ஆம், கர்த்தர் இதிலே வாச மாயிருப்பார்”. என்றார். சாண்பத்தைப் பற்றியும் தேவன் இவ்வண்ணமே சித்தங்கொண்டார். அதே சங்கீதக்காரன், ” நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும் வெள்ளி யால் அலங்கரிக்கப்பட்ட புறாச் சிறகுகள் போலும், பசும்’ பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள் ” என்றும் தீர்க்கத்தரிசனம் உரைத்தார். சீயோன் வாசிகளுக்கு கருளப்பட்ட இவ்வாசீர்வாதம் சாண்பத்து மக்களிலும் நிறை வேறக் கண்டேன். அது எவ்விதம் நிறைவேறிற்று? இக்கேள் விக்கு விடை, அன்று, ‘நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா’ என்று சந்தேகித்த நாத்தான்வேலுக்கு, (இயேசுவின் வாசஸ்தலமும் தொழிலகமுமான நாசரேத்துக்கு) “வந்துபார்’ என்று உத்தரம் கொடுக்கப்பட்டது போன்றே, இன்றும் கொடுக்கப்படக்கூடும்.
இப்புஸ்தகத்தை எழுதுவதற்கு எமக்குத் துணையாயமைந்த நூல்களின் அட்டவணை யொன்றை இத்துடன் இணைத்திருக் கிறேன். தவிரவும் இவ்வாராய்ச்சி சம்பந்தமாய் மறைந்து நின்ற அனேக விஷயங்களைத் தெரிவித்த சென்னை ராவ்சாகிப் S. K. தேவசிகா மணி, நாசரேத் ஸ்ரீ போ தகம் கோவில்பிள்ளை, ஸ்ரீ R. T. கிறிஸ்றியன், ஸ்ரீமதி பாலம்மாள் அம்மாள், ஸ்ரீ மோசஸ் ஆபிரகாம், ஸ்ரீமதி G. D. ஞானாயுதம் அம்மாள், ஸ்ரீ A. கோவில் பிள்ளை (Retired A.I.S. teacher) முதலியோருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். மேலும் முந்திய காலத்துப் புகைப்படங்களை ஆர்வத்துடன் எமக்கனுப்பித்தந்து எம்மை ஆசீர்வதித்த S. P. G. தாய்ச் சங்கத்தாருக்கும், உற்சாகப்படுத்தி எழுதின மகா கனம் நீல் அத்தியக்ஷரவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும். டென்மார்க் தேசத்தில் சின்ன விங்பி (Listle Lyngby) சபைக்குரு மிகுந்த பிரயாசத்துடன் நம் முதல் மிஷ னெரி கனம் ரோசன் ஐயரவர்களின் புகைப்படமொன்று தயா ரித்து எமக்கனுப்பி உதவியதற்கு இவண் உவப்புடன் நன்றி செலுத்துகிறேன். அவ்வாறே நசரைவாசிகளிலும் பலர் படங் களைக் கொடுத்து தவினர். பழைய ரிக்கார்டுகளைப் புரட்டிப் பார்த் தாராய எமக்கு அனுமதி தந்த சென்னை அத்தியக்ஷா தீன ஆபீஸ் அதிகாரிகளும், அவனுள்ள ஸ்ரீமான் ஏஞ்சல் தேவதாஸ் அவர் களும், நெல்லை அத்தியக்ஷா தீன அதிகாரிகளும், நசரைப் பஞ்சாயத் போர்ட் பிரசிடென்றும், கிளார்க் ஸ்ரீ துரைசாமி தாமஸ் அவர்களும் எமக்கு வெகு ஒத்தாசை செய்துள்ளார்கள்.
கையெழுத்துப் பிரதிகள் சுமார் 420 பக்கக்களுக்கு (Fools<cap sizo) மேவிருந்தும் அவற்றை ஊக்கத்துடன் வாசித்துத் தமிழ் நடை திருத்திய பரி. யோவான் பெண்கள் கலாசாலைத் தமிழாயர் ஸ்ரீ V. சுவிசேஷமுத்து வித்துவானவர்களும், திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் உயர்தரக் கலாசாலைத் தமிழரையர் வித்துவான் A. M. பரிமணம் அவர்களும், அவற்றைத் தெளிவாயெழுதி அச்சுக்குத் தயாராக்கின சகோதர சகோ தரிகளும், அச்சுப் பிரதிகளைத் திருத்துவதில் உதவியாற்றிய திருமறையூர் ‘மாணவரான கனம் B. மாணிக்கராஜ் ஐயர், ஸ்ரீ P. G. சத்திய நாதன் என்போரும் இவண் அன்புடன் பாராட்டப்படுவதற் குரியர்.
இந்னலுக்கு முன்னுரை எழுதி, எம் முயற்சியை ஆசீர் வதித்த திருநெல்வேலி மகாகனம் செல்வின் அத்தியக்ஷரவர் களுக்கும் மிகுந்த நன்றிகூறி, சாணளவான சாண்பத்தை நகரள வான நாசரேத்தாக்கித் தம் நாமத்தை மகிமைப்படுத்தச் சித்தம் கொண்ட நசரையம்பதியதிபராம் எம்பெருமான் இயேசுநாதரின் திருவடிகளுக்கே இந்நூலைப் பாதகாணிக்கையாகச் சமர்ப்பிக் கிறேன்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நாசரேத் மிசன் சரித்திரம்”

Your email address will not be published. Required fields are marked *