Sale!

நற்கருணைத் தியானமாலை

0.00

கிறிஸ்தவத்தில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதில் மிகமுக்கியமான ஒன்று கிறிஸ்து இயேசுவின் நற்கருணை பந்தி. அதனை நாம் எவ்வாறு ஆசரிக்கவேண்டும் என்று பலர் பல விதமாக கூறியிருந்தாலும், நம் இடத்தில் கிறிஸ்துவின் பணியை சிறப்பாக செய்த பேராயர். இராபர்ட் கால்டுவெல் ஐயர் கூறியுள்ள விதம் சிறிது வித்தியாசமானது. எப்படி என்றால், நாம் இக்காலத்திலும் நம் சபையில் ஆசரித்து வருகிற திருவிருந்து ஆராதனை முறைமையின் அர்த்தங்களை தழுவி கர்த்தருடைய பந்தியாம் நற்கருணையின் சிறப்புகளை ஓங்க கூறி, நம்மை எப்படி அந்த பந்திக்கு தயார் படுத்தவேண்டும் என்று ஆரம்பம் முதல் முடிவு வரை கூறியுள்ளதாகும். இந்த புத்தகம் வெளிட்டு சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் ஆனாலும் நாம்மால் இந்த புத்தகத்தின் தமிழ் அமுதினை கொண்டு இன்றும் தேவனாகிய பிதாவின் அன்பினை உணர முடியும் என்பதில் ஐயமில்லை. இந்த புத்தகத்தினை இக்காலத்தில் வாசிக்கும்படியாக தமிழ் எண்களை, கணித எண்களாகவும் பழைய வடமொழி தமிழ் எழுத்துக்களை நம் இக்கால தமிழ் எழுத்துக்களாவும் மாற்றியுள்ளோம். மட்டுமல்லாது பேராயர் இராபர்ட் கால்டுவெலின் பிரசங்க வடிவிலான நற்கருணை ஆராதனை முறைமையின் விளக்கத்தை, தலைப்புகளோடு பல பகுதிகளாக வகுத்துளோம். எனவே படிப்போர் தங்களின் பாடல் புத்தகத்தோடு படித்தால் ஏன் ஆராதனை முறைமை இவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணரலாம். இப்புத்தகத்தில் காணப்படும் தியானங்கள் வேத அடிப்படையிலானது எனபதை சுட்டும் வகையில் ஒவ்வொரு தியானத்த்திற்கும் மேலே அதன் ஆதார வசனம் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த புத்தகம் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமையும் என்று விசுவாசிக்கிறோம். தேவ சமாதானம் பெருகட்டும்!

Category: Tag:

Description

கர்த்தருடைய இராப்போசனத்தைச் சேர்ந்தவர்களும், அதற்கு ஆயத்தமாகிறவர்களும் தங்களைச் சோதித்தறிந்து செபத்தியானஞ்செய்து சேரவேண்டிய ஒழுங்கிருக்க, இத்தேசத்துக் கிறிஸ்தவர்களில் அநேகர் வேதவசனத்தை நன்றாய் அறியாதவர்களாயும், தேவ பத்தியில் தேறாதவர்களாயும், தியானம் பண்ணுகிறதில் வழக்கப்படாதவர்களாயும் இருப்பதினாலே, நற்கருணைக்கென்று ஆயத்தம் பண்ணிக்கொள்ளுஞ் சமயத்திலும், அதை வாங்குந் தருணத்திலும் வாசித்துணரத்தக்க செபத்தியானங்களுள்ள புத்தகம் அவர்களுக்கு அவசியம் தேவையாயிருக்கின்றது. அப்படியிருந்தும், இதுவரையில் அப்படிப்பட்ட புத்தகம் இல்லாததால் அநேகர் ஏற்றபடி கர்த்தருடைய பந்தியைச் சேர ஏதுவில்லாமல், தரிசு நிலத்தில் மழைபெய்தும் பயிர் விளையாதது போல், ஆசீர்வாதமும் ஆறுதலும் அடையாமல் போனதுண்டு. இதைக்குறித்து நெடுக விசாரப்பட்டு, இக்குறைவைத் தீர்க்க என்ன செய்யலாமென்று யோசித்து, நற்கருணைத் தியானப் புத்தகமொன்றைச் செய்யும்படி தீர்மானித்ததின் பேரில், யூரோப்புக்கண்டத்திலிருக்கிற உத்தமபத்தியும் ஞானமுமுள்ள குருமார் அக்கண்டத்துக் கிறிஸ்தவர்களுடைய பிரயோசனத்திற்காகச் செய்த நற்கருணை ஆயத்தப் புத்தகங்களைப் பரிசோதித்து, அவற்றில் இத்தேசத்துச் சபையாருடைய புத்திக்கும் தமிழ்மொழிக்கும் இசைந்தவைகளைத் தெரிந்தெடுத்து, கூட்டியும் குறைத்தும் இப்புத்தகத்தை உண்டாக்கியிருக்கிறேன். இச்செபத்தியானங்களை அவரவர் தனித்து வாசிக்கிறது மன்றி, கிறிஸ்தவர்கள் செபஞ்செய்யும்படி கூடி வரும் வேளைகளிலும் சில தியானங்களை வாசிக்கத்தகும். தேவநற்கருணை வாங்கும் போதெல்லாம் இப்புத்தகத்தில் அடங்கியிருக்கிற செபத்தியானங்கள் ஒவ்வொன்றையும் முறையாய் வாசிக்க வேண்டுமென்று நினைக்க வேண்டாம். ஒரு மாதத்தில் சில தியானங்களையும், அடுத்த மாதத்தில் மற்றுஞ் சில தியானங்களையும் வாசித்தால், எப்பொழுதும் எழுப்புதல் உண்டாக ஏதுவாயிருக்கும். இயேசு இரட்சகரின் அன்பை நினைத்துக் கொண்டாடுவதற்குக் கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவேண்டியதால், இப்படிப்பட்ட செபத்தியானங்களை வாசிக்கச் சமயங்கிடையாவிட்டாலும், கர்த்தருடைய பந்தியைச் சேராமல் இருக்கக்கூடாது. “தங்கள் பிதாக்களின் தேவனாகிய பராபரனைத் தேடும்படி தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்தஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள பராபரன் அவர்களுக்கு மன்னிப்பாராக.” (2 நாளா:30:19) இப்புத்தகத்திலுள்ள செபங்களையும் தியானங்களையும் வாசிக்கிற ஆயத்தமே போதுமென்று ஒருவரும் நினைத்து மோசம் போகக்கூடாது. பாவத்தை உணர்தலும், கிறிஸ்துநாதரை விசுவாசித்துப் பற்றிக்கொள்ளுதலும், அவர் அருளும் வரப்பிரசாதங்களை வாஞ்சித்தலுமாகிய ஆயத்தம் அவசியம் வேண்டும். இவ்வாயத்தமில்லாமல் எந்தத் தியானங்களை வாசித்தாலும், எவ்வகை எத்தனஞ்செய்து முயன்றாலும் பிரயோசனம் வராது. கர்த்தருடைய இராப்போசனம் ஆவிக்குரிய விருந்தாதலால், ஆவியோடும் உண்மையோடும் சேருகிறவர்களே அதற்குப் பாத்திரவான்கள். இத்தேசத்துக் கிறிஸ்தவர்கள் இப்புத்தகத்தின் உதவியால் பத்திக்கேற்ற ஆயத்தத்தோடே தேவநற்கருணையை வாங்கும்படிக்கும், “கர்த்தர் தயவுள்ளவர் என்கிறதை அவர்கள் ருசித்துப்பார்த்து” இயேசுக் கிறிஸ்துவை அறியும் அறிவிலும் கிருபையிலும் வளர்ந்தேறி வரும்படிக்கும், கடவுள் கட்டளையிட்டு ஆசீர்வாதந்தந்தருளக்கடவர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நற்கருணைத் தியானமாலை”

Your email address will not be published. Required fields are marked *