தமிழ் வளர்த்த கிறிஸ்தவர்
₹0.00
இந்த நூலை எழுத்தியவர் இரத்தினராஜா என்பவராவார். தமிழை வளர்த்தவர்கள் சைவர் மட்டுமே எனக் கூறப்படும் தப்பான கொள்கைக்கு எவ்வித ஆதாரமுமில்லை என்பதை விளக்க இச்சிறு நூல் பயன்படும் என நம்புகிறோம். மேலும் கிறிஸ்தவ மிசனரிகளின் தமிழ் தொண்டையும் காணலாம்
Description
தமிழ்மொழியின் சீரையும் சிறப்பையும் அதன் தெய்வத் தன்மையையும் உலகுக்கு எடுத்துக்காட்டியவர்கள் ஐரோப்பிய கிறீஸ்தவக் குருமாரே! தமிழின் சிறப்பை வெளி யுலகுக்கு எடுத்துக் கூறியது மட்டுமன்றி, பல துறைகளிலும் தமிழை வளர்த்தவர்கள் அவர்களே, இதுவரை தமிழை வளர்த் தவர்கள் தமிழை இருந்தவாறே ஏந்தியணைத்து வளர்த்தார்கள். அதற்கு வேண்டிய திருத்தங்களைச் செய்து வளர்த்தார்களில்லை. இப்பெருந்தொண்டை ஆக்கியவர்கள் ஐரோப்பியக் கிறிஸ்தவ குருமாரேயாவர். இவர்கள் காலம் வரை தமிழிலே வசன நடை நூல் வெளிவந்ததில்லை; வசனங்கள் மொழி பிரித்து எழுதப்பட வில்லை. தமிழ் நெடுங் கணக்கு சீராக்கப்பட்டதில்லை; தமிழிலே அகராதி இருந்ததில்லை. தமிழ் நூல்கள் எதுவும் அச்சிலே! இருந்ததில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு வந்த ஐரோப்பிய கிறிஸ்தவ குரு மார், தாம் கற்றுத்தேறிய தமிழ் மொழியை மேலும் வளர்க்க வும் உலகறியச் செய்யவும் ஆர்வம் கொண்டனர். தமிழ் மொழி யில் பல திருத்தங்களையும் மாற்றங்களையும் ஆக்கி, அன்று வரையில்லாத அரும் பெருந்தொண்டைத் தமிழுக்கு ஆற்றினர். அவர்களை பின்பற்றிவந்த தமிழ் நாட்டினதும் ஈழ நாட்டின தும் கிறிஸ்தவரது தமிழ்த்தொண்டைப் பார்க்குமிடத்து. தமிழை வளர்த்தோர் கிறிஸ்தவ தொண்டருமே என்ற சத்தியம் புலனாகும். தமிழ்மொழி வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தோருள் கிறிஸ்தவ தொண்டர் ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கின் றனர் என்பதும் புலனாகும்.
தமிழை வளர்த்தவர்கள் சைவர் மட்டுமே எனக் கூறப்படும் தப்பான கொள்கைக்கு எவ்வித ஆதாரமுமில்லை என்பதும் புலனாகும். இதனை விளக்க இச்சிறு நூல் பயன்படும் என நம்பு கிறோம்.
Reviews
There are no reviews yet.