இரட்சணிய யாத்திரிகம்
₹0.00
ரட்சணிய யாத்திரிகம் என்றி ஆல்பிரட் கிருட்ணபிள்ளை (எச்.ஏ.கிருட்டினனார்) அவர்களால் எழுதப்பட்ட ஒரு காப்பிய நூல் ஆகும். ஜாண் பான்யன் (John Bauyan) என்பவர் ஆங்கிலத்தில் இயற்றிய ‘புனிதப் பயணிகள் முன்னேற்றம்’ என்ற நூலின் தமிழாக்கமான மோட்சப்பிரயாணம் என்னும் நூலைத் தழுவி செய்யுள் நடையில் எழுதப்பட்டதாகும்.(The Pilgrim’s Progress) தழுவல் ஆகும். கம்ப இராமாயண இலக்கிய வழியிலும், தண்டியலங்கார இலக்கண வழியிலும் தமிழ் மரபுக்கேற்ப எழுதப்பட்டுள்ளது.
Description
● இரட்சணிய யாத்திரிகப் பெருமை
கிறித்துவத் தமிழ்க் காப்பியங்களுள் சிறப்பு வாய்ந்த காப்பியம் இரட்சணிய யாத்திரிகம். ஆங்கில நாட்டவரான ஜான் பனியன் என்பவர் எழுதிய திருப்பயணியின் முன்னேற்றம் (PILGRIM’S PROGRESS) என்னும் நூலைத் தழுவித் தமிழ்ப் பண்பாடு ஒரு சிறிதும் தவறாமல் எழுதப்பட்ட நூல் இரட்சணிய யாத்திரிகம்.
● காப்பியம் பிறந்த கதை
இயேசு பெருமானின் திருவருளால் ஆட்கொள்ளப்பெற்று, கிறித்துவம் தழுவிய கிருஷ்ணபிள்ளை, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் முதுமொழிக்கு ஏற்ப, தமது இறை அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார். மேலும் இயேசு பெருமானின் பெருமையைப் புகழ்ந்து, அவரைப் போற்ற வேண்டும் என்ற விருப்பமும் அவர் உள்ளத்தில் எழுந்தது. இந்தப் பின்னணியில்தான் அவர், திருப்பயணியின் முன்னேற்றம் என்ற ஆங்கில நூலைப் படிக்க நேர்ந்தது. ஜான் பனியன் எனும் மேலை நாட்டு இறையடியார், தமது சிறைவாசத்தின்போது தாம் கண்ட கனவின் விளக்க நூலான திருப்பயணியின் முன்னேற்றம் என்ற ஆங்கில நூலை எழுதினார். இந்த நூல் கவிஞர் வாழ்ந்த காலத்தில் பெரும் புகழ் பெற்று, பலராலும் பாராட்டப்பட்டது. இந்நூலின் கருத்தாலும் செய்தியாலும் பெரிதும் கவரப்பட்ட கவிஞர், இந்நூலைத் தழுவித் தமிழில் காப்பியம் ஒன்று இயற்ற முற்பட்டார். அதுவே இரட்சணிய யாத்திரிகம்.
இனி, இக்காப்பியத்தின் அமைப்பு, காப்பியத்தின் கருப்பொருள், காப்பியம் எழுதப்பட்ட நோக்கம், காப்பியத்தில் கூறப்படும் செய்தி அல்லது கதை, தமிழ்க் காப்பிய இலக்கணம் இந்நூலில் பொருந்தியுள்ள தன்மை முதலிய செய்திகளைக் காண்போம். இதனால் இக்காப்பியப் பண்புகளை நாம் ஒருவாறு அறிய முடியும்.
இரட்சணிய யாத்திரிகம் சிறப்புப் பாயிரம் எனும் பகுதியோடு தொடங்குகிறது. இப்பகுதியில் கடவுள் வாழ்த்து, நூல் இயற்றக் காரணம், நூலின் வழி, அதன் எல்லை, நுதலிய பொருள், நூற்பயன், யாப்பு, பதிகம் என்பவற்றுடன் சிறப்புப் பாயிரத்தின் பாடல்கள் முடிகின்றன. அதையடுத்து மூன்று பாடல்கள் இடம்பெறுகின்றன. நூலில் 3622 பாடல்கள் உள்ளன. இந்த நூல் ஐந்து பருவங்களாகவும் 47 படலங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது. முதலாவது வரும் ஆதி பருவத்தில் 19 படலங்களும் (1097 பாடல்கள், தேவாரம் 31), தொடர்ந்து வரும் குமார பருவத்தில் 4 படலங்களும் (714 பாடல்கள், தேவாரம் 23), நிதான பருவத்தில் 11 படலங்களும் (803 பாடல்கள், தேவாரம் 10), ஆரணிய பருவத்தில் 10 படலங்களும் (739 பாடல்கள், தேவாரம் 12), இரட்சணிய பருவத்தில் 3 படலங்களும் (250 பாடல்கள், தேவாரம் 48), முடிவுரையில் 20 தேவாரங்களும் அமைந்துள்ளன. சிறப்புரை 19 (16+3) பாடல்களாகும்.
பருவம் என்பது பெரும் பிரிவு, படலம் அப்பருவத்தினுள் அமையும் சிறுபிரிவு. எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை இந்த நூலில், பண்ணோடு பாடப் பெற்ற சைவத் தேவாரப் பாடல்களை அடியொற்றி 144 பாடல்கள் இயற்றியிருக்கிறார். தேவாரப் பண்ணையும், நடையையும் கையாண்டு தேவாரம் என்னும் தலைப்பிலேயே பருவந்தோறும் இடையிடையே அந்த இசைப் பாடல்களை அமைத்துள்ளார். இந்த நூலில், கீழ்க்குறிப்பிடுமாறு அப்பாடல்கள் அமைந்துள்ளன.
Reviews
There are no reviews yet.